உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் பாலாலய பூஜை

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் பாலாலய பூஜை

திண்டுக்கல்; ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் விரைவில் திருப்பணிகள் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு கோயில் வளாகத்திலுள்ள விநாயகர், கைலாசநாதர், ஆஞ்சநேயர், தண்டாயுதபாணி சுவாமி, ஆனந்தவல்லி அம்மன், வள்ளி தேவசோனா சமேத சுப்பிரமணியர், நவகிரகங்கள், பைரவர் ஆகிய 8 சன்னதிகளின் கோபுர கலசங்கள், படங்களின் உருவில் கருவறைக்குள் வைப்பதற்கான பாலாலயம் நடைபெற்றது. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம், கலாகர்சனம் பூஜைகளுடன் யாக பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதிக்குப் பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !