உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நாளை துவக்கம்

அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நாளை துவக்கம்

பழநி; ஹிந்து அறநிலையத்துறை சார்பில் பழநியில் ஆக.24ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்க உள்ளது. ஆக. 24, 25 என இருநாட்கள் பழநி பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் நடக்கும் இந்த மாநாட்டில் கட்டுரை, ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் சிறப்புகளை சொல்லும் கண்காட்சிகள், 3டி தொழில் நுட்பத்துடனான முருகன் பக்தி பாடல்கள் காட்சி அரங்கம், முருகன் அடியார் பெயர்களில் விருது வழங்கும் விழா, ஆன்மிக சொற்பொழிவுகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. ஆக. 24 காலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., ஐ.பி. செந்தில்குமார் முன்னிலையில் மாநாடு துவக்க விழா நடக்கிறது. திருவாவடுதுறை, குன்றக்குடி, பேரூர், செங்கோல், சிரவை, திருப்பாதிரிப்புலியூர், தருமபுரம், மதுரை, பொம்மபுரம், திருப்பனந்தாள், சூரியனார்கோயில், வேளாக்குறிச்சி ஆதினங்கள், சமய பெரியோர், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் நிறைவு நாளில் 15 பேருக்கு நீதிபதி வேல்முருகன் விருதுகளை வழங்குகிறார்.


மாநாட்டு அரங்கம் ஆய்வு; பழநியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை ஆக.,24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான மாநாட்டு பந்தலை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பழநியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது இதற்காக 3டி தியேட்டர் வி ஆர் தியேட்டர் உணவு அரங்கங்கள் ஆய்வரங்கங்கள் மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட காரணங்கள் மலைக்கோயில் போன்ற மாநாட்டு முகப்பு கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது இதனை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி, சச்சிதானந்தம் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக எம்.எல்.ஏ., செந்தில்குமார் மாநாட்டு பந்தல் மற்றும் அரங்கை பார்வையிட்டார். இதில் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !