உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு; திருத்தணி ஆசிரிய தம்பதியின் ஆய்வு கட்டுரை தேர்வு

பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு; திருத்தணி ஆசிரிய தம்பதியின் ஆய்வு கட்டுரை தேர்வு

திருத்தணி; ஹிந்து சமய அறநிலைத் துறை சார்பில், நாளை பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கவுள்ளது. மாநாட்டின் நோக்கம் தமிழ்க் கடவுள் முருகனின் அருமை, பெருமைகளை பறைசாற்றுவதும், முருகனடியார்களை உலகறியச் செய்வதுமாகும். இந்த மாநாட்டில் உலக அளவிலிலான லட்சக்கணக்கான முருகனடியார்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் நடைபெறவுள்ள உலகளாவிய கருத்தரங்கிற்கு திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கல்லுாரியின் உதவிப்பேராசியரும், தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் கு.செ.சரஸ்வதி மற்றும் அவரது கணவரும் திருத்தணி சுப்ரமணியபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் ச.ம.மாசிலாமணி ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரைகள் மாநாட்டு ஆய்வு மலரில் இடம் பெற்றுள்ளன. தமிழிணையர் கல்விப் பணி, தமிழ்ப் பணி மற்றும் திருக்குறள் பணி என முத்தரப்பு பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர் மாசிலாமணி, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் முத்திரைப் பதித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !