முருக்கம்பாடி செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :492 days ago
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தில் பழமையான செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மணலூர்பேட்டை அடுத்து உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மூன்றாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மேளதாளம் முழங்க வேத மந்திரத்துடன் மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.