ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED :724 days ago
ராமேஸ்வரம்; விடுமுறை நாள் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று விடுமுறை நாள் யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். பின் கோயிலில. சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.