உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மொபைல் போனுக்கு தடை

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மொபைல் போனுக்கு தடை

திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில் செப்., 1 ம் தேதி முதல், மொபைல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்ட குறிப்பு : கோவில் புனித தன்மை, அமைதியை பேணும் வகையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல, ராஜகோபுரம் அருகே, மொபைல் போன் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும். 5 ரூபாய் கட்டணமாக செலுத்தி, பக்தர்கள் மொபைல் போனை ஒப்படைத்து, டோக்கன் பெற்று செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பியதும், மொபைல் போனை பெற்றுச் செல்லலாம். கோவிலுக்குள் மறைமுகமாக மொபைல் போன் எடுத்து சென்றால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிர்வாகத்திற்கு, பக்தர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !