உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

ராமேஸ்வரம்; உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ராமேஸ்வரம் கிளை சார்பில் நேற்று ராமேஸ்வரம் கோயிலில் உலக நன்மைக்காக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ராமநாதபுரம், ராமேஸ்வரம் தீவு பகுதி, கீழக்கரை, திருப்புல்லாணி, தேவிபட்டிணம், உச்சப்புளி பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் குத்துவிளக்குடன் பூஜையில் பங்கேற்றனர். பூஜையில் மந்திரம் முழங்க குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதியம்மாள் செய்திருந்தார்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !