வடமதுரை சித்திமுக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :427 days ago
வடமதுரை; வடமதுரை மேற்கு ரத வீதி ஸ்ரீமத் சித்தி முக்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷே க விழா நடந்தது. கடந்த ஆக.18ல் காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், பால் குட ஊர்வலம் நகரை வலம் வந்தது. நேற்று காலை விநாயகர் பூஜையுடன் துவங்கி அநிக்கை, கடங்கள் ஸ்தாபனம், வேதிகா அர்ச்சனை, ருத்ரம், திருமஞ்மனம் போன்ற யாக பூஜைகள் நடந்தன. மதியம் அன்னதானம், இரவு உற்ஸவர் ஊர்வலம் நடந்தது. ஏற்பாட்டினை ஸ்ரீமத் சித்திமுக்தி விநாயகர் சேவை அறக்கட்டளை தலைவர் கோதண்டபாணி, செயலாளர் குமார், பொருளாளர் சீனிவாசன், துணை தலைவர் பவுன்ராஜ், துணை செயலாளர் வேல்மணி, விழா குழுவினர் செய்திருந்தனர்.