உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு

திருப்பூர் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு

திருப்பூர்: கிருஷ்ணன் அவதரித்த தினம், கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஊத்துக்குளி ரோட்டில் உள்ள குருவாயூர ப்பன் கோவிலில், காலை, 5:30 மணிக்கு, கோமாதா பூஜை; 6:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை, 6:30 மணிக்கு மகா  அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார்.


* ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாயை முன்னிட்டு தினமும் காலை 7:00  மணிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை, திருப்பாவை, பக்தி இன்னிசை, ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள்  நடைபெற்று வந்தன. ஸ்ரீ வடபத்ர சயனார், ஸ்ரீ யதிராஜ சம்பத்குமார், ஸ்ரீ யோகநாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளினார். , ஸ்ரீ  வெண்ணைதாழி கிருஷ்ணர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூக்களால் கோவில் முழுவதும்  அலங்கரிக்கப் பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !