நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :579 days ago
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இக்கோவிலின் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் ஊற்றி யாகம் செய்து சிவனுக்கும் பெருமாளுக்கும் சங்காபிஷேகம் நடந்தது. ஒரே சமயத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.