உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுகாரம்பட்டி கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுகாரம்பட்டி கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

நத்தம், நத்தம் அருகே மதுக்காரம்பட்டி கோகுலகிருஷ்ணன் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பால்குட ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று திருவிளக்கு பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.தொடர்ந்து இன்று காலை பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என‌ ஏராளமானோர் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலையில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாராதனையும், சுவாமி தேவியருடன் எழுந்தருளி வீதி உலா வந்தது. இதில் முன்னதாக பெண்கள் கோலாட்டத்துடன் கும்மியடித்தல், உறியடித்தல், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கபட்டது.விழாவில் பல முக்கிய பிரமுகர்களும் , பொதுமக்களும், கலந்து கொண்டனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !