திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை விழா
                              ADDED :430 days ago 
                            
                          
                          
நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கார்த்திகை பூஜை விழா நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.