ஆவணி புதன்; கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :752 days ago
கோவை; ஆவணி மாதம் இரண்டாவது புதன் கிழமை மற்றும் தசமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி தாயார் உடன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரிவரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.