பல்லடம் ஐயப்பன் கோவில் ஆக., 30ல் கும்பாபிஷேகம்
ADDED :440 days ago
பல்லடம்; பல்லடம் சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில், ஆக., 30 அன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
பல்லடம் பஸ் ஸ்டாண்டு அருகே, சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் குழுவினரின் சார்பில், இக்கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மூலவராக ஐயப்பனும், கன்னிமூல கணபதி, மாளிகைபுரத்தது அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களும் இங்கு உள்ளன. ஆக., 30 அன்று நான்கு கால பூஜைகளுடன் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கூனம்பட்டி திருமடம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள் மற்றும் கும்பாபிஷேக யாகசாலை பூஜை சர்வசாதகர் அருள்மலை தோரணவாவி சிவஸ்ரீ குமார சிவஞான சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.