கண்ணன் அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :755 days ago
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் உற்சவர் நேற்று வெண்ணெத்தாழி கண்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அன்று இரவு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு திருவாராதன பூஜைகள் நடந்தது. நேற்று மாலை உற்சவர் சரநாராயண பெருமாள் வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின் உறியடி உற்சவம், மாட வீதி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.