திருக்கோஷ்டியூர் வளரொளிநாதார் கோயிலில் மகா பைரவ யாகம்
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டி வளரொளிநாதார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலபால கால பைரவர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நேற்று இரவு 7:00 மணிக்கு பைரவர் மூலவர் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மகா கணபதி பூஜை, தீபாராதனைகள், மகா பைரவ யாகம் நடந்தது. பின்னர் கோ பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திரம், மற்றும் புஷ்ப யாகத்தை தொடர்ந்து மகாபூர்ணாகுதி நடந்தது. யாகசாலையில் கலசங்களுக்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம், கற்பூர தீப உள்ளிட்ட அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. திரளாக பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.