உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் உண்டியல் திறப்பு; ரூ.20.45 லட்சம் காணிக்கை

நெல்லையப்பர் கோயிலில் உண்டியல் திறப்பு; ரூ.20.45 லட்சம் காணிக்கை

திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் 21 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.20.45 லட்சம் காணிக்கை கிடைக்கப்பெற்றது. நெல்லையப்பர் கோயிலில் நேற்று 21 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.20 லட்சத்து 45 ஆயிரத்து 504, 11 கிராம், 100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 215 கிராம், 100 மி.கிராம் எடையுள்ள பல மாற்று வெள்ளி இனங்களும் கிடைக்கப் பெற்றன. மேலும் வெளிநாட்டு பணத்தாள்கள் 22 கிடைக்கப் பெற்றன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !