மேலையூர் சிராவெட்டி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை; மேலையூரில் கோலாகலமாக நடைபெற்ற சிராவெட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மேலையூரில் ஸ்ரீ நல்ல சிவமூர்த்தி என்று போற்றப்படும் சிரா வெட்டி அய்யனார் கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சிராவெட்டி அய்யனாரை பல ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை வேண்டிய மாத்திரத்தில் அருளும் சிராவெட்டி அய்யனார் கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 23ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 26 ஆம் தேதி முதல் காலை யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றன. யாகசாலை நேரங்களில் திருமுறை பாராயணம் வேத பாராயணமும் நடைபெற்றன. இன்று காலை 10:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடன்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை பலம் வந்து விமானத்தை அடைந்தன அதனை அடுத்து தசமி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய 11:15 மணிக்கு வேத மந்திரங்கள் ஓத விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் மற்றும் பூஜைகளை ரஜினி குழுக்கள் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பால்வண்ணன் தலைமையில் சிராவெட்டி அய்யனார் ஆன்மீக கைங்கரிய சபாநிர்வாகிகள் செய்திருந்தனர்.