ஷீரடி சாய்பாபா மந்திரில் வருஷாபிஷேக விழா; 108 சங்குபூஜை
ADDED :445 days ago
விருதுநகர்; விருதுநகர் அருகே மீசலுார் ஷீரடி சாய்பாபா மந்திரில் 15ம் வருஷாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கி 108 சங்குபூஜை, பஞ்ச சூக்த பாராயணங்கள், தீபாரதனை, கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. அதன் பின்பு பக்தி இசைவாணி சசிரேகா, பக்தி மாமணி சாஸ்தா தாசனின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் நிர்வாக அறங்காவலர் ராகவன் நாயுடு, சென்னை தயாக்கர், வாஸ்து நிபுணர் யுவராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.