அன்னூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி வெள்ளி சிறப்பு வழிபாடு
ADDED :566 days ago
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் அங்காளம்மன் மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் அங்காளம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்திலும், மாரியம்மன் சந்தன காப்பபு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.