விநாயகர் சதுர்த்தி விழா; வெள்ளி மூசிக வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா
ADDED :444 days ago
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா நேற்று ஆக.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. இந்த நிலையில், நேற்று இரவில் முதல் நாள் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் விநாயகர், வெள்ளி மூஷிக வாகனத்தில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலா வந்த விநாயகரை தெருக்களில் கோலமிட்டு பெண்கள் வரவேற்றனர். முன்னதாக மூலவர் மற்றும் உற்சவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.