காணப்பாடி சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மன் ஊர்வலம்
ADDED :445 days ago
வடமதுரை; காணப்பாடியில் வலம்புரி விநாயகர், சக்தி மாரியம்மன் கோயில் உற்ஸவ திருவிழா ஆக. 20ல் அம்மன் சாட்டுதலுடன் துவங்கியது. ஆக.27 இரவு துவங்கி கரகம் ஜோடித்தல், மாவிளக்கு, முளைப்பாரி அழைத்தல், அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து கிடா வெட்டுதல், பாரிவேட்டை என பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. அம்மன் கங்கை செல்லும் ஊர்வலத்துடன் திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாட்டினை பூஜாரி சுப்பையா, பெட்டிகர் வெள்ளைச்சாமி பிள்ளை செய்திருந்தனர்.