உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி மூன்றாம் சனி; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆவணி மூன்றாம் சனி; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவை; ஆவணி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் கரி வரதராஜ பெருமாள் துளசி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ஆவணி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு , மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி கிராமம் குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் மலை மேல் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வெற்றிலை மாலை அலங்காரத்தில் மஞ்சள் நிற வஸ்தரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஆஞ்சநேயர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !