உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர், மலையாள பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஏற்பாடுகள் தீவிரம்

செல்வ விநாயகர், மலையாள பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஏற்பாடுகள் தீவிரம்

காரமடை; காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கா புங்கம்பாளையத்தில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் கோபுரம் வர்ணம் பூசும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவொற்று இரு கோவில்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் யாகசாலையில் ஏழு ஹோகுண்டங்களும் , இரண்டு வேதிகை மற்றும் நடுவில் பத்ம பீடமும் வர்ணங்கள் பூசி  பணிகள் நிறைவடைந்து. திங்கள் அதிகாலை மகா கணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி ஓமம் நவக்கிரக ஹோமம் தனபூஜை கோ பூஜை மாஹாதீபாரதனையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. 


அதனைத் தொடர்ந்து புதன்கிழமை மாலை முளைப்பாரி மற்றும் தீர்த்த குடம் எடுத்து வருதல், மங்கல இசை வாஸ்து சாந்தி பிரிட்டன் மிருத்சங்கிரஹனம், அங்குரார்பணம், காப்பு கட்டுதல் யாக சாலை பிரவேசம் முதற்கால வேள்வியில் 108 மூலிகை பொருட்கள் கொண்டு ஹோமம் பூர்ணாகுதி மகா தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை இரண்டாம் கால வேள்வியும் மதியம் மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் மாலையில் மூன்றாம் கால வேள்வி மகா பூர்ணாகதி முடிந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று முப்பது மணிக்கு மங்கல இசையுடன் நான் நான்காம் கால வேள்வி நிறைவு பெற்று பூரணாகுதி யாத்ரா தானம் முடிந்து கடம் புறப்பாடு காலை ஐந்து முப்பதுண மணிக்கு செல்வ விநாயகருக்கு கோபுர கலசத்தில் கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகமும் ஆறு முப்பது மணிக்கு அருள்மிகு மலையாள பகவதி அம்மன் கோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.  தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. திருவிழாவில் ஒவ்வொரு நாட்களும் கலைநிகழ்ச்சிகள் சண்டை மேளம் வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது விழா ஏற்பாட்டினை தர்மகர்த்தா திருமப்பகவுடர் ஊர் கவுடர் ஜெயபாலசுப்பிரமணியம் , விழா கமிட்டியார், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !