ஆவணி அமாவாசை ; வீட்டில் குலதெய்வத்தை வழிபட மறவாதீர்..!
ஒவ்வொரு மனிதனும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். ஒரு பிள்ளையை வளர்க்க பெற்றோர் செய்த தியாகத்திற்கு அளவே கிடையாது. அவர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது எவ்வளவு அவசியமோ, அதுபோல அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதற்காக பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்தனர். தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர்கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர். அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம். தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். தீர்த்தக் கரைகளில் பிதுர் வழிபாடு செய்வது குடும்பம் தழைக்க உதவும். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன் தரும். தவிர்க்க முடியதாக காரணத்தால் பிதுர்காரியம் செய்ய முடியாமல் போனால், இன்று வீட்டில் குலதெய்வத்தை வழிபட வேண்டும். விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட முன்னோர் ஆசியுடன் செல்வச்செழிப்புடன் வாழலாம்.