உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அமாவாசை; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

ஆவணி அமாவாசை; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

கோவை; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஆவணி மாத அமாவாசை திதையொட்டி பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து வழிபட்டு காகங்களுக்கு உணவளித்த பின்னர் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். ஆவணி மாதம் சோமவார அமாவாசை தினத்தையொட்டி கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருக்கும் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !