அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :479 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அகத்திய மாமுனிவர், மனைவி உலோபமுத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அகத்திய முனிவர் அவதரித்த ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி அகத்தியருக்கும், உலோப முத்திரைக்கும் நேற்று மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பள்ளி மாணவ – மாணவியர் அகத்தியரின் 108 போற்றியை ஒன்றாக இணைந்து பாராயணம் செய்தனர்.