உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு

13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு

காரியாபட்டி; காரியாபட்டி முடுக்கன்குளத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியமான திருச்சுழி சரக அலுவலக நிர்வாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத அம்பலவாண சுவாமி கோயில் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோயிலின் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவதற்காக தாமரைகள் நிறைந்த குளத்தினைக் கொண்ட, இந்த சிவனைத் தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம். மிகவும் பழமை வாய்ந்த தளமாக விளங்கும் அம்பலவாணர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல நூற்றாண்டுகளாகின. சேதமடைந்து, வருகின்றன. புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !