உடுப்பி மூகாம்பிகை கோவிலில் கேரள கவர்னர் தரிசனம்
                              ADDED :424 days ago 
                            
                          
                          
உடுப்பி; கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், உடுப்பியின், பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு வருகை தந்து, தரிசனம் செய்தார்.
உடுப்பியின் ஸ்ரீ கிருஷ்ண மடத்தில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மஹோற்சவம் நடந்தது. ஆகஸ்ட் 1ல் துவங்கிய நிகழ்ச்சி, நேற்று நிறைவடைந்தது. ஒரு மாதம் நடந்த நிகழ்ச்சிகளில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்; கிருஷ்ணரை தரிசித்தனர். கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று முன் தினம் உடுப்பிக்கு வந்தார். கொல்லுாருக்கு சென்று மூகாம்பிகை தேவியை தரிசனம் செய்தார். மூகாம்பிகை கோவில் தலைமை அர்ச்சகர் நரசிம்மா, சுப்ரமண்ய அடிகா ஆகியோர், கவர்னர் ஆரிப் முகமது கானை வரவேற்று கவுரவித்தனர். அங்கிருந்து உடுப்பி வந்த அவர், நேற்று காலை ஸ்ரீகிருஷ்ணர் மடத்துக்கு சென்றார். கிருஷ்ணரை தரிசனம் செய்தார்; பூஜைகளில் பங்கேற்றார்.