ஆப்பூரில் துலுக்காணத்தம்மன் கோவில் திருவிழா விமரிசை
                              ADDED :423 days ago 
                            
                          
                          
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில், பழமையான துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி மாதம், அம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா மற்றும் பால்குடம் எடுத்தல் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடத்த கிராம கூடி முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 30ம் தேதி மாலை, அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, பால்குடம் எடுக்கப்பட்டது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் அம்மன் வேடமிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, மாலை அம்மனுக்கு கூழ்வார்த்தல் மற்றும் கும்பம் படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், திருவீதி உலா நடந்தது. இதில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.