விருத்தாசலம் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :769 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
விருத்தாசலம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று சிறப்பு பூஜைகளுக்கு பின் புனித நீர் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.