மேலும் செய்திகள்
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
366 days ago
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
366 days ago
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சதுர்த்தி விழாவில் கற்பகவிநாயகர் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தையும், மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தையும் தரிசித்தனர். நாளை காலை சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். இக்கோயிலில் பத்து நாள் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. இன்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு கற்பகவிநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:50 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. பெண்கள்,சிறுவர்,சிறுமியர் உற்சாகமாக சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்தனர். தேர்கள் கோயிலை வலம் வந்தன. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். நீண்ட வரிசையில் நின்று சுவாமி அலங்காரத்தை பக்தர்கள் தரிசித்தனர்.நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை நடை திறந்து, பக்தர்கள் தரிசனம் துவங்குகிறது. கோயிலிலிருந்து காலை 9:30 மணி அளவில் உற்ஸவ விநாயகர்,ச ண்டிகேஸ்வரர் கோயில் தெற்கு படித்துறையில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து அங்குசத்தேவருக்கு படித்துறையில் அபிேஷக,ஆராதனைகள் நடந்து தீர்த்தவாரி நடைபெறும். மதியம் 1:30 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவு 11:00 மண அளவில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
366 days ago
366 days ago