திருமலை கோவிலுக்கு எம்.பி., 100 ஏக்கர் நிலம் நன்கொடை!
ADDED :4717 days ago
நகரி: திருமலை, திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, 100 ஏக்கர் நிலம், காணிக்கையாக வழங்கப்படும், என, குண்டூர் எம்.பி., சாம்பசிவ ராவ் கூறினார்.திருமலை கோவிலில், தன் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:இதற்கு முன், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வினுகொண்டா பகுதியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 200 ஏக்கர் நிலத்தை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளேன். தற்போது மேலும், 100 ஏக்கர் நிலத்தை விரைவில் ஒப்படைக்க உள்ளேன். இதற்கு முன் வழங்கிய, 200 ஏக்கர் நிலத்தில், வெங்கடேச பெருமாள் கோவில் கல்யாண மண்டபம், கோசாலைக்கு கட்டடம் கட்டப்பட உள்ளது. இவ்வாறு, சாம்பசிவ ராவ் கூறினார்.