உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி யொட்டி ராமேஸ்வரத்தில் முக்கிய இடங்களில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்த 25 விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து மகா தீபாரதனக நடந்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நேற்று ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் இந்திரா நகர், எம்.ஆர். டி., நகர், பஸ் ஸ்டாண்ட், கரையூர் உள்ளிட்ட 25 இடங்களில் இருந்த விநாயகர் சிலைகள் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்தனர். பின் விநாயகர் சிலைகளுக்கு மகா தீபாராதனை நடத்தியதும் பக்தர்கள் சிலைகளை அக்னி தீர்த்தத்தில் கரைத்தனர். மேலும் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை கடல், நீர்நிலைகளில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !