ஆவணி சஷ்டி; மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :717 days ago
கோவை; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாதத்தில் வரும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் சஷ்டி வழிபாடு மிக சிறந்ததாக கருத்தப்படுகிறது. ஆவணி சஷ்டியை முன்னிட்டு விபூதி காப்பு அலங்காரத்தில் ராஜ அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். சரவணபவ சொல்லி விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர்.