உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகனேரி நீலகண்டேஸ்வரர், விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பாகனேரி நீலகண்டேஸ்வரர், விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சிவகங்கை, பாகனேரி கருணாகடாட்சி சமேத நீலகண்டேஸ்வரர், தாயார் ஆண்டாள் சமேத விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. ஆறு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:45 மணிக்கு நீலகண்டேஸ்வரர் கோயில் கோபுர கலசத்தில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், பாகனேரி முத்துவடுகநாத குருக்கள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்தனர். மாலை 4:15 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6:15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமி புறப்பாடு நடந்தது. * பாகனேரி பூமிநீளா சமேத விண்ணவண்ண பெருமாள் கோயிலில் காலை 5:30 மணிக்கு புன்யாகவாசனம், கும்ப பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அர்ச்சகர்கள் புனித நீர் கடப்புறப்பாடு நடந்தது. காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். மாலை 6:30 மணிக்கு பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிேஷகத்தில் பங்கேற்றனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பாகனேரி நகரத்தார்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !