/
கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தங்க திருவாச்சி காணிக்கை அளித்த பக்தர்
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தங்க திருவாச்சி காணிக்கை அளித்த பக்தர்
ADDED :403 days ago
சிதம்பரம்; சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் தங்கத்தால் செய்த சுடல் திருவாச்சி புவனகிரி சேர்ந்த பக்தர் வழங்கினார். கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. நேற்று புவனகிரியை சேர்ந்த பக்தர் ஒருவர் நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும், தங்கத்தால் செய்த சுடல்திருவாசி சாற்றப்பட்டது. அப்போது நடராஜர் கோயில் தீட்சிதர் சுப்பிரமணியம் மூலம் கோயிலுக்கு சமர்ப்பிக்கபட்டது. நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் வழங்கப்பட்ட திருவாச்சி மதிப்பு ரூ.2கோடி 35 லட்சம் மதிப்பும், 2 கிலோ 400 கிராம் தங்கம், 1 கிலோ 200 கிராம் வெள்ளி என கூறப்படுகிறது. பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். அப்போது நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் உடன் இருந்தனர்.