பழநியில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :406 days ago
பழநி; பழநி ரயில்வே காலனி ஆதி விநாயகர், முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.6ல் கணபதி பூஜை உடன் கும்பாபிஷேக முதல் கால பூஜைகள் துவங்கியது. செப்.7 ல் 2ம் கால யாகப் பூஜைகள் நடந்தது. செப்.9ல் காலையில் ஆதி விநாயகர் கோவில் முத்துமாரியம்மன் கோயில் கும்ப கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின் திருக்கல்யாணம் உற்ஸவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மண்டலம் செய்ய பூஜைகள் தொடங்கியது.