சேலை அலங்காரத்தில் மாமரத்து பெரிய நாயகி அம்மன் அருள்பாலிப்பு
ADDED :466 days ago
சின்னசேலம்; சின்னசேலம் அம்சாகுளம் மாமரத்து பெரிய நாயகி அம்மன் சேலை அலங்காரத்தில் அருள் பாலித்தார். சின்னசேலம் அடுத்த அம்சாகுளத்தில் உள்ள மாமரத்து பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி வெள்ளி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாமரத்து பெரியநாயகி அம்மனுக்கு சேலை அலங்காரம் செய்து மகாதீபாராதானை காண்பித்து வழிபாடுகளை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.