ஏகாம்பர சிவன் கோயிலில் 16 வகை அபிஷேகம்; திருவாசகம் முற்றோதல் விழா
ADDED :355 days ago
ரெகநாதபுரம்; ரெகுநாதபுரம் ஏகாம்பர சிவன் கோயில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பில் 26 ஆவது மாத திருவாசகம் முற்றோதலில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். மூலவர் ஏகாம்பர சிவன் மற்றும் நந்தி பகவானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கைலாய வாத்தியம் முழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சிவ நாம அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் விஸ்வகர்மா விழா கமிட்டியாளர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.