உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு அபிஷேகம்

உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு அபிஷேகம்

கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 


புரட்டாசி மாதம் திருவிழாக்கள் நடக்கும் மாதமாக விளங்குகிறது. புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாத பிறப்பான இன்று கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் கரிவரதராஜ பெருமாள் முத்தங்கி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !