உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகள் துவக்கம்

கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிகள் துவக்கம்

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம் நகரிலுள்ள சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவிலில், மழைக்காலங்களில் தண்ணீர் கசிவு உள்ளது. அதனால், கோவிலின் பழமை மாறாமல் புனரமைப்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி, காங்., – எம்.பி., கோபிநாத் தலைமையில், நேற்று கோவில் புனரமைப்பு பணிக்கு கொண்டு வரப்பட்ட கருங்கற்களுக்கு சிறப்பு பூஜை நடத்தி பணி துவங்கப்பட்டது. மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் முருகன், கவுன்சிலர் மல்லிகா தேவராஜ், தொழிலதிபர் ஜெய்சங்கர், தி.மு.க., விளையாட்டு பிரிவு துணை அமைப்பாளர் மஞ்சுநாத், முன்னாள் கவுன்சிலர் சரஸ்வதி நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் பூசாரி ஸ்ரீதர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !