எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம்
ADDED :392 days ago
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு அனந்த விரத உற்சவம் நடந்தது. அப்போது பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதன்படி மக்கள் அனந்த, முடிவில்லாத கடவுள் விஷ்ணுவின் கதைகள் மற்றும் புராணங்கள் ஓதும் நாளாகவும் உள்ளது. மேலும் விஷ்ணு பகவானை அனந்த சதுர்த்தியின் போது விரதம் இருந்து வழிபடுபவருக்கு கர்மா, துக்கம் மற்றும் வலியில் இருந்து விடுபட உதவும் என நம்பப்படுகிறது. இந்த விழாவானது ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கொண்டாடப்படுகின்றது. அனந்தம் என்றால் முடிவில்லா, எல்லை இல்லாத நிலை என்ற அர்த்தம் உள்ளது.