காமாட்சி அம்மன் கோவிலில் விஸ்வகர்மா ஆராதனை விழா பக்தர்கள் தரிசனம்
ADDED :417 days ago
உடுமலை; உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஆராதனை விழா நடந்தது. உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா விழா வேதபாராயணங்கள் முழங்க கொடி ஏற்றுதலுடன் துவங்கியது. தொடர்ந்து விஸ்வ காயத்ரி ஆவாஹனம், மகா விஸ்வகர்ம விஸ்வ சித்தியாகம், பூர்ணாஹுதியுடன் சிறப்பு யாகவேள்வி நடந்தது. காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.