/
கோயில்கள் செய்திகள் / ஈசனை நாடி வந்த சூரியன்; முக்தீஸ்வரர் கோயில் கருவறைக்குள் சூரிய கதிர்கள்.. பக்தர்கள் பரவசம்
ஈசனை நாடி வந்த சூரியன்; முக்தீஸ்வரர் கோயில் கருவறைக்குள் சூரிய கதிர்கள்.. பக்தர்கள் பரவசம்
ADDED :717 days ago
மதுரை; தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது.
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை சூரிய கதிர்கள் கருவறைக்குள் நுழைந்து சுவாமியை தரிசிக்கும் நிகழ்வு நடக்கும். மார்ச், செப்டம்பரில் சில நாட்கள் மட்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கிறது. அதன்படி நேற்று மண்டபத்தை தொட்டபடி உதித்த சூரிய பகவான் நந்தியை கடந்து பிரவேசித்தார். இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று துவங்கிய இந்த நிகழ்வை செப்.30 வரை காலை 6:15 மணி முதல் 6:25 மணி வரை மற்றும் காலை 6:40 மணி முதல் 6:50 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.