ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம்
ADDED :412 days ago
பெரியகுளம்; உலக நன்மை வேண்டி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய 2 ம் நாள் பூஜையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டருகே உலக நன்மை வேண்டி 2 ம் நாள் பூஜையில் பங்கேற்றார். யஜமான ஸங்கல்பம், கணபதி பூஜை, அக்னி பிரதிஷ்டை, கலசபூஜையை தொடர்ந்து நாலாயிர திவ்ய ப்ரபந்த பாராயணம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கைலாசநாதர் கோயில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.