கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
                              ADDED :409 days ago 
                            
                          
                          
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார், ஜட்ஜ் பங்களா சாலை கமலவல்லி சமேத கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. தொடர்ந்து, யாகசாலை ேஹாமம், திருமஞ்சனம், மாலை வீதியுலா நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலை யாகசாலை ேஹாமம், மாலை வீதியுலா நடக்கிறது. வரும் 26ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு துவாதச ஆராதனை, புஷ்பயாக உற்சவம், பூர்ணாகுதி, கொடியிறக்குதல், 30ம் தேதி மாலை 6:00 மணிக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.