உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி முதல் சனிக்கிழமை; பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி முதல் சனிக்கிழமை; பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை நடைபெற்றது. 


பாலமலை ரங்கநாதர் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருமாள் அன்ன வாகன உற்சவத்தில் எழுந்தருளினார். இதே போல நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிம்ம பெருமாள், காளிபாளையம் திருமலைராய பெருமாள், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !