தேய்பிறை சஷ்டி; பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :542 days ago
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புரட்டாசி தேய்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுககு பிரசாதம் வழங்கப்பட்டது.