வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் பஞ்சமி யாக பூஜை
ADDED :415 days ago
சாணார்பட்டி; சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகிஅம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி தேய்பிறை பஞ்சமி யாக பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். தேய்பிறை பஞ்சமி யாக பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.